சாராயம் கொடுக்காததால் வீட்டின் கேட்டினை உடைத்த பொலிஸ்
சாவகச்சேரி பகுதியிலுள்ள வீடொன்றிற்கு சென்று சாராயம் கேட்டு தராததால் வீட்டின் கேற்றினை சாவகச்சேரி பொலிசார் உடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடொன்றிக்கு நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் சென்று வீட்டின் உரிமையாளரிடம் சாராய போத்தல்கள் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாராய போத்தல் கொடுக்காததால் வீட்டின் கேற்றினை அடித்து உடைத்ததுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளரான சுப்பிரமணியம் நிதிகேசன் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் தாடி வளர்த்து இருந்தார்கள் எனும் சந்தேகத்தில் மானிப்பாய் பகுதியில் இரு இளைஞர்களை மானிப்பாய் பொலிசார் கைது செய்து அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு இருந்தனர்.
குறித்த இரு இளைஞர்களில் ஒருவர் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.