இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஐ.நா. நடுநிலை வகிக்க வேண்டும் - வடமாகாண சபையில் தீர்மானம்
இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தீர்வுகாணும் பேச்சுக்களில் ஐக்கிய நாடுகள் சபை மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 40ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் பிரேரணை முன்மொழியப்பட்டது.
அதில், இலங்கையில் உள்ள தமிழர் அரசியல் விவகாரம் அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்தும் தீர்க்கப்படாமல் உள்ளது. போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்தும் தீர்க்கப்டாதனை கவனத்தில் கொண்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை பற்றிய 2014 ஆம் ஆண்டு மார்ச் இத்தீர்மானமானது நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் தொழில் நுட்ப உதவியை வழங்க இலங்கைக்கு முன்வந்ததை கருத்தில் கொண்டும்,
இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளினதும், ஐக்கிய நாடோகுள் சபையினதும் பங்களிப்பு தேவை என்பதனை இச்சபை உறுதியாக நம்புகின்றது. இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய நாடுகள் சபை மஸ்தியத்தம் வழங்க வேண்டும், நிரந்த தீர்வை பெற்றுக்கொள்வதற்கு தொழில் நுட்ப உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை வழங்க வேண்டும், என தனது பிரேரணையை சிவாஜிலிங்கம் முன்மொழிந்தார்.
இதனை வழிமொழிந்த உறுப்பினர் சர்வேஸ்வரன், சர்வதேச நாடுகளின் பங்களிப்பு என்பதனை ஐக்கிய நாடுகளது பங்களிப்பாக மாற்றப்படல் வேண்டும் என பிரேரணையில் திருத்தம் கொண்டு வந்தததோடு, இந்த பிரேரணை தற்போது முக்கியத்துவம் வாய்ந்தது என கருத்து தெரிவித்தார்.
எனினும் இந்த பிரேரணை தற்போது கொண்டுவர வேண்டிய தேவை இல்லை. ஏற்கனவே ஸ்ரீலங்கா மீது ஐக்கிய நாடுகள் சபையில் பிரேரணை நிறைவேற்றப்படு அது நடைமுறைப்படுத்தும் தற்போதைய நிலையில் இது தேவையற்றது. இது நிறைவேற்றப்பட்டால் அதனை குழப்ப நேரிடலாம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா கூறினார்.
இதே கருத்துப்பட கூறிய உறுப்பினர் அஸ்மின் கட்சின் முடிவினை அறிந்து இந்த பிரேரணையை நிறைவேற்றுவதா? இல்லையா? என உறுப்பினர்கள் முடிவெடுப்பதற்கு கால அவகாசம் இல்லை, ஆகையால் அடுத்த அமர்வு வரை இதனை பிற்போடுமாரும் கேட்டுக்கொண்டார்.
எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவாஜி தனது தரப்பு கருத்துக்களை முன்வைத்து பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டியதன அவசியத்தையும் வலியுறுத்தினார். இதன் பின்னர் சிவாஜிலிங்கத்தின் பிரேரணை சிறு திருத்தங்களோடு நிறைவேற்றப்பட்டது.