Breaking News

எமது சமூகத்தைப் புகலிடமற்றவர்கள் ஆக்குவதே நோக்கம்-முதலமைச்சர்(காணொளி)

ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை எடுத்துக் கையாளும்
மாலை­யாக இன்­றைய மாலை பரி­ண­மித்­துள்­ளது. நிலமும் நாங்­களும் என்ற பொருள்­பற்றி ஆரா­யக்­கி­டைத்­துள்­ளது. ஒரு பாரம்­ப­ரிய சமூ­கத்தின் அடை­யா­ளமே அது வாழ்ந்து வரும் நிலந்தான். பாரம்­ப­ரிய நிலத்தில் இருந்து சமூ­கத்தைப் பிரித்தால் பிரிக்­கப்­பட்ட சமூகம் அநா­தை­யா­கி­விடும். அதன் உறுப்­பி­னர்கள் அக­தி­க­ளா­கி­வி­டுவர்.

அக­திகள் என்றால் புக­லிடம் அற்­றவர் என்று அர்த்தம். கதி என்ற சொல்­லுக்கு ஒரு அர்த்தம் புக­லிடம். ஆகவே அ(சக)+கதி என்றால் புக­லிடம் அற்­றவர் என்று பொருள்­ப­டு­கி­றது. எமது பாரம்­ப­ரிய சமூ­கத்தைப் புக­லிடம் அற்­ற­வர்கள் ஆக்­கவே பல நட­வ­டிக்­கைகள் அண்­மைக்­கா­லங்­களில் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2009ஆம் ஆண்டு மே மாதம், யுத்­த­மா­னது முடி­வுக்கு வந்­தது. யுத்த ஆயு­தங்கள் மௌனிக்­கப்­பட்­டன. வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளுக்குப் படை­யெ­டுத்து வந்­த­வர்கள் யுத்தம் முடிந்­த­தென்று தங்கள் இடங்­க­ளுக்குத் திரும்பிச் செல்­ல­வில்லை. 

எமது பாரம்­ப­ரிய நிலங்­களில் பாரிய பகு­தியைப் படைகள் தம் வசம் பற்­றி­வைத்துக் கொண்டு வாழ்ந்து வரு­கின்­றார்கள். அந் நிலங்­களில் உரி­மை­யுடன் வாழ வேண்­டி­ய­வர்கள் நிரா­த­ர­வாக, நிர்க்­க­தி­யி­ன­ராக பிறர் நிலங்­களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரு­கின்­றார்கள். இவர்கள் இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக இவ்­வா­றான இடர் வாழ்க்­கையில் இருந்து வரு­கின்­றார்கள். இங்கு மட்­டுமல்ல் இந்­தி­யா­விலும் இதர நாடு­க­ளிலும் வாழும் இப்­பேர்ப்­பட்ட மக்கள் தமது பாரம்­ப­ரிய இடங்­களைப் பறி கொடுத்­து­விட்டே அங்கு வாழ்ந்து வந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

தொடர்ந்து வந்த மத்­திய அர­சாங்­கங்கள் துய­ருற்ற எமது அக­தி­க­ளுக்கு அண்மைக் கால­மாகப் பலவித உறுதி மொழி­களை அளித்து வந்­தி­ருந்­தாலும் அவர்­களைத் தத்­த­மது பாரம்­பரியக் காணி­களில் மீளக் குடி­ய­மர்த்­து­வதில் சிக்­கல்­களும் தாம­தங்­க­ளுமே மிஞ்சி இருக்­கின்­றன. இடம்­பெ­யர்ந்த எம் மக்­களைக் குடி­ய­மர்த்த வேண்டும் என்­பதில் அதி­கா­ரத்தில் உள்­ளோ­ருக்குப் போதிய கரி­சனை இருக்­கின்­றதோ என்­பதில் எமக்குச் சந்­தே­க­மாக இருக்­கின்­றது. 

காணி­களை விடு­விப்போம் என்­றார்கள். அதில் ­தா­மதம். அர­சியல் கைதி­களை விடு­விப்போம் என்­றார்கள். இப்­பொ­ழுது விசேட நீதி­மன்றம் அமைக்கப் போவ­தாகக் கூறு­கின்­றார்கள். ஆகவே எங்கள் சந்­தே­கங்கள் நியா­ய­மா­னவை. காணி­களை இரா­ணுவம் கையேற்று வைத்­தி­ருப்­பதை நான் காலத்தின் கோல­மாகக் கரு­த­வில்லை. காலா­தி­கா­ல­மாகக் கர­வாகக் கடை­யப்­பட்ட கருத்­துக்­களின் கடை நிலை­யா­கவே நான் அவர்­களின் நட­வ­டிக்­கை­களைக் காண்­கின்றேன். 

நாட்­டுக்குச் சுதந்­திரம் கிடைக்க முன்­னரே அர­ச­கு­டி­யேற்­றங்கள் ஆரம்­ப­மா­கி­விட்­டன. அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்­தோ­மானால் தமிழ் மக்கள் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்து வந்த இடங்­களில் இன அமைப்பில் மாற்­றங்­களை இழைக்க வேண்டும் என்ற இழி­வான கர­வெண்­ணமே அக் குடி­யேற்­றங்­களின் காரணம் என்­பது தெரி­ய­வரும். 1983ஆம் ஆண்டின் இனக் கல­வ­ரத்தின் பின்னர் 1985ஆம் ஆண்டில் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற மனித உரி­மைகள் குழு தயா­ரித்த தனது அறிக்­கையில் அது பின் வரு­மாறு கூறி­யது 

“We can say, without doubt, that the Government is driving Tamils from their homes and does intend to settle Sinhalese people in those areas” 

அதா­வது ஐய­மின்றி எம்மால் ஒன்று கூற­மு­டியும். அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­களின் வாழ்­வி­டங்­களில் சிங்­கள மக்­களைக் கொண்டு வந்து குடி­யி­ருத்த முனைந்­துள்­ளது என்­றார்கள். இதற்­கான கார­ணங்­களை அர­சாங்­கத்­திடம் கேட்ட போது அவர்கள் அன்று அளித்த காரணம் இலங்கை ஒற்­றை­யாட்­சிக்­குட்­பட்ட ஒரே நாடு. வளங்­களைத் தேடிச் சென்று இலங்கை வாழ் மக்கள் அவற்றைப் பகிர விடப்­பட்­டுள்­ளார்கள் என்­பது. இது தவறு. அதா­வது வள­முள்ள இடங்­க­ளுக்கு மக்கள் ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்­டார்கள் என்று கூறி­யது தவறு. 

இந் நாட்­டிற்குச் சுதந்­திரம் கிடைக்க முன்­பி­ருந்தே ஈர­லிப்­பான வளம் மிகுந்த இடங்­களில் இருந்து வரண்ட வளம் குறைந்த இடங்­க­ளுக்கே பல்­லா­யிரம் மக்கள் குடி­யா­ன­வர்கள் குடி­யி­ருத்தல் திட்­டங்­களின் கீழ்க் குடி­ய­மர்த்­தப்­பட்­டார்கள். இவ்­வா­றான குடி­யேற்றத் திட்­டங்­களால் பாரம்­ப­ரி­ய­மாகத் தமிழ்ப்­பேசும் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் அவர்­க­ளி­டம் இருந்து பறித்­தெ­டுக்­கப்­பட்­டன. 

உதா­ர­ணத்­திற்கு திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சிங்­கள மக்­களின் தொகை­யா­னது 1911இல் இருந்து 1981 வரை­யான கால­கட்­டத்தில் 3.8 சத­வி­கி­தத்தில் இருந்து 33.6 சத­வி­கி­தத்­திற்கு மேலெ­ழுந்­தது. அதே கால­கட்­டத்தில் தமிழ் மக்­களின் தொகை­யா­னது 56.8 சத­வி­கி­தத்தில் இருந்து 33.7 சத­வி­கி­தத்­திற்குக் கீழி­றங்­கி­யது. அதே கால­கட்­டத்தில் அம்­பாறை மாவட்­டத்தில் சிங்­கள மக்­களின் சனத் தொகை 7 சத­வி­கி­தத்தில் இருந்து 38 சத­வி­கி­தத்­திற்கு மேலெ­ழுந்­தது. தமிழ்ப் பேசும் மக்­களின் தொகை 37 சத­வி­கி­தத்தில் இருந்து 20 சத­வி­கி­தத்­திற்கு கீழி­றங்­கி­யது. 

இது 1983ஆம் ஆண்­டுக்கு முன்­னைய புள்ளி விப­ரங்கள். இவ்­வா­றான இன அடிப்­ப­டை­யி­லான மாற்­றங்கள் தான் சிங்­கள மக்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட சேரு­வில, அம்­பாறை போன்ற தேர்தல் தொகு­திகள் 1976ஆம் ஆண்டில் உரு­வாக வழி­ய­மைத்­தன. இதே மாதி­ரி­யான மாற்­றங்கள் தற்­பொ­ழுது வட மாகா­ணத்தின் தென் பகு­தி­க­ளிலும் ஆரம்­ப­மா­கி­விட்­டன. இன அழிப்பு பற்றி நாங்கள் கொண்­டு­வந்த பிரே­ர­ணையை எதிர்ப்­ப­வர்கள் இவை பற்­றி­யெல்லாம் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். 

தமிழ் இளை­ஞர்கள் வன்­மு­றையில் இறங்­கி­யதைக் கார­ண­மாகக் காட்டி இவ்­வா­றான இன விரட்டல் காரி­யங்கள் மேலும் உக்­கிரப் படுத்­தப்­பட்­டன. அதா­வது கிளர்ச்­சி­களைத் தவிர்க்க எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­க­ளாகக் காட்டி 1980ஆம் ஆண்­டு­களில் பாது­காப்பு நிலை­யங்­களை உரு­வாக்­கு­வது பற்­றி­ய­தான சட்­டங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. முதலில் பாது­காப்பு நிலையம் அமைத்து அதன் பின் அதனைச் சுற்­றிய இடங்­களைப் பாது­காப்பு வல­யங்கள் ஆக்கி அதன்பின் அதி­யுச்சப் பாது­காப்பு வல­யங்கள் தாபிக்­கப்­பட்­டன. 

பாது­காப்பு நிலை­யங்ளைச் சுற்­றிய பிர­தே­சங்­களை அண்­டிய பல சதுர கிலோமீற்றர் காணிகள் பாரம்­ப­ரிய மக்­களை அங்கு குடி­யி­ருக்க விடாமல் தடுத்து வைக்கும் இடங்­க­ளாக மாற்­றப்­பட்­டன. அது மட்­டு­மல்­லாமல் இடை­நிலைப் பாது­காப்பு வல­யங்கள் அல்­லது Buffer Zones என்று கூறி மக்­களை விரட்டிப் படை­யினர் கைவசம் அவர்­களின் காணி­களைக் கையேற்கும் இன்­னொரு கைங்­க­ரி­யமும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. 

இரா­ணுவ முகாம்கள் இருந்த இடத்தில் இருந்து ஆயிரம் மீற்றர் தூரத்­திற்கு ஆட்கள் எவரும் இருக்­கப்­ப­டாது என்று பிர­க­டனம் செய்­ததால் பலாலி போன்ற இடங்­களில் சுற்­று­வட்­டார மக்கள் யாவரும் குடி­பெ­யர்ந்து செல்ல வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது. இது காலஞ் செல்லச் செல்ல பல இடங்­களில் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்­டது. இது உள்­நாட்டில் காணி­க­ளுக்கு ஏற்­பட்ட விபத்து; மக்­க­ளுக்கு ஏற்­பட்ட விரட்டு. அதேபோல் கடற்­படை கண்­கா­ணிப்பு வலயங்கள் வடக்கு, கிழக்கு, வட­கி­ழக்குக் கரை­யோரப் பகு­தி­களில் 1985ஆம் ஆண்டில் இருந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. 

இதனால் கரை­யோரத் தமிழ்ப் பேசும் மக்கள் தமது வாழ்­வி­டங்­களை விட்டு வெளியேறி இந்­தியா போன்ற நாடு­களில் தஞ்சம் புக வேண்டி வந்­தது. இவ்­வாறு கடற்­க­ரை­யோ­ரங்­களில் இருந்தும் உள் நாட்டில் பல இடங்­களில் இருந்தும் தமிழ் மக்கள் தமது பாரம்­ப­ரிய நிலங்­களில் இருந்து விரட்­டப்­பட்­டதன் கார­ணத்தை அறிய விழைவோம். 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரை­யி­லான காலத்தில் இலங்­கையில் அர­சியல் வன்­முறை என்ற நூலில் பேரா­சி­ரியர் காமினி சம­ர­நா­யக்க என்­பவர் வட­மா­கா­ணத்தைச் சுற்றி 2 இலட்சம் குடி­யா­ன­வர்­களைக் குடி­யேற்­று­வது என்ற அர­சாங்­கத்தின் கொள்கை ரீதி­யான முடிவு பாது­காப்­பையும் அபி­வி­ருத்­தி­யையும் மைய­மாக வைத்து எடுக்­கப்­பட்ட முடிவு. 

அதனால் வடக்கைச் சுற்றி ஒரு பாது­காப்பு வல­யத்தை உண்­டாக்க வேண்டும் என்றே இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது என்று கூறி­யுள்ளார். அவரின் கூற்றை உறு­திப்­ப­டுத்­து­வது போல் பெப்­ர­வரி 1985ல் ஒன்­பது அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளினால் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் 41ஆவது அமர்வின் போது பின் வரு­மாறு கூறப்­பட்­டது. 

“The President of Sri Lanka has announced his Government’s plan to colonise all Tamil areas with Sinhala settlers to reflect the nationwide population ratio of 75% Sinhalese and 25% other minority ethnic groups. This is calculated to undermine the numerical strength of Tamils in areas where they have traditionally lived” 

அதா­வது நாட்டின் ஜனா­தி­பதி அவர்கள் தேசிய சனத்­தொகை விகி­த­மான சிங்­க­ளவர் 75 சத விகிதம் மற்­றை­யவர் 25 சத விகிதம் என்ற உண்­மையைப் பிர­தி­ப­லிக்­கு­மு­க­மாக தமி­ழர்கள் வாழும் எல்லா இடங்­க­ளிலுஞ் சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அறி­வித்­துள்ளார். இச் செய்­கை­யா­னது தமி­ழர்கள் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்த இடங்­களில் அவர்­களின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் வண்­ண­மா­கவே மேற்கொள்­ளப்­பட்­டுள்­ளது என அவர்­களால் சுட்டிக் காட்­டப்­பட்­டது. 

ஒரு முக்­கிய உண்­மையை சிங்­கள அர­சி­யல்­வா­திகள் என்­றென்றும் மறந்து விடு­கின்­றார்கள். இரண்­டா­யிரம் ஆண்­டு­காலம் வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் தமிழ்ப் பேசும் மக்கள் தான் பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்து வந்­துள்­ளனர். வேறெ­வரும் அங்கு அவ்­வாறு பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்­த­தில்லை. இதைச் சிங்­களத் தலை­வர்கள் கூட 1919ம் ஆண்டில் ஏற்றுக் கொண்­டி­ருந்­தனர். இலங்கை நாடா­னது ஒற்றை நிர்­வா­கத்தின் கீழ் ஆங்­கி­லே­யரால் 1833ம் ஆண்­டி­லேயே கொண்டு வரப்­பட்­டது. அதற்கு முன்னர் இரண்­டா­யிரம் வரு­டங்­க­ளுக்கும் மேலாக வட கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்­களே பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்ந்து வந்­தனர். 

அவர்­க­ளுக்­கென்று இராச்­சி­யங்­களும் இருந்­தன. அப்­ப­டி­யி­ருந்தும் தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய வாழ்­வி­டங்­களை மதிக்­காது மேற்­படி தீர்­மா­ன­மா­னது திரு.ஜே.ஆர். ஜய­வர்த்­தன ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் அர­சாங்­கத்தால் எடுக்­கப்­பட்­டது. அதன் கார­ண­மாக யுத்தம் நீடிக்கத் தொடங்­கி­யதும் அர­சாங்கம் தமிழ் மக்­களின் காணி­களைச் சுவீ­க­ரிப்­பதில் கண்ணாய் இருந்து வந்­துள்­ளார்கள். அதனைத் தமது இரா­ணுவப் பாது­காப்புச் சித்­தாந்­தத்தின் கொள்­கை­யா­கவும் நடை­மு­றைப்­ப­டுத்தி வந்­துள்­ளார்கள். 

அதி­யுச்ச பாது­காப்பு வலை­யங்­க­ளா­னவை காணி­களைச் சுவீ­க­ரித்­தது மட்­டு­மல்­லாமல் பொது­மக்­களை அங்­கி­ருந்து அகற்றி அவர்­களின் வரு­கைக்குத் தடை விதிப்­ப­தா­கவும் அமைந்­தது. 6 இத­னால்த்தான் எமது உள்­நாட்டுக் குடி பெயர் மக்­களின் அவ­லங்கள் தொடர்ந்­தி­ருந்து கொண்டு வரு­கின்­றது. அதி உச்சப் பாது­காப்பு வலை­யங்கள் என்று யுத்த காலத்தில் அடை­யாளம் காட்­டப்­பட்ட இடங்கள் இப்­பொ­ழுதும் அவ்­வாறே குறிப்­பி­டப்­ப­டு­வது பிழை­யென்று தெரிந்து தான் சில இடங்­களை விசேட அபி­வி­ருத்தி வலை­யங்கள் என்று பெயர் மாற்றித் தாமே அங்கு தொடர்ந்­தி­ருந்து வரு­கின்­றார்கள் இரா­ணு­வத்­தினர். இவ்­வா­றான இரா­ணுவ செயல்­பா­டு­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பலர். உதா­ர­ண­மாக 

1. உயர் பாது­காப்பு வலை­யங்­க­ளினால் உள்­நாட்­டி­னுள்­ளேயே குடி­பெ­யர்ந்த மக்கள் 
2. இந்­தியா, மேலை­நா­டுகள் போன்­ற­வற்­றிற்கு மேற்­படி உயர் பாது­காப்பு வலை­யங்­களின் நிமித்தம் புலம் பெயர்ந்து சென்ற மக்கள் 
3. போரில் பல­வற்­றையும் இழந்து தமது காணி­க­ளுக்­கான உரி­மை­யா­வ­ணங்­க­ளையும் இழந்து நிற்கும் மக்கள். 
4. சுனா­மியால் இடம் பெயர்ந்த மக்கள் 
5. காலா­வதிச் சட்ட ஏற்­பா­டு­களின் கீழ் பல வரு­ட­கா­ல­மாகத் தமது காணி­களில் இரா­மை­யினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் 
6. வேறு விதங்­களில் இரா­ணு­வத்­தினால் கையேற்­கப்­பட்­டி­ருக்கும் வியா­பாரக் காணிகள் அத்­துடன் வீடு­களை இழந்து நிற்கும் மக்கள். புலம் பெயர்ந்த மக்­களுள் முஸ்லீம் மக்­களும் அடங்­குவர். ஆண் துணை­களை இழந்த பெண்­களும் அவர்தம் குடும்­பங்­களும் அடங்­குவர். எனவே இன்று நாம் நிலமும் நாங்­களும் என்ற தலை­யங்­கத்தின் கீழ் பல விட­யங்­களை அவ­தா­னித்­துள்ளோம். 

முக்­கி­ய­மாக அர­சியல், இரா­ணுவ, இன­ரீ­தி­யான சிந்­த­னைகள் கார­ண­மாக பாரம்­ப­ரிய வாழ்­வி­டங்­களைத் தொலைத்­து­விட்ட நிலையில் எமது மக்­களுள் பலர் அவல வாழ்க்கை வாழ்ந்து வரு­கின்­றார்கள். அவர்கள் மட்­டு­மல்­லாமல் அவர்­களைத் தற்­கா­லி­க­மாக வாழ இட­ம­ளித்த நிலங்­களின் சொந்­தக்­கா­ரர்கள் கூட எதுவும் செய்ய முடி­யாத ஒரு நிலையில் உள்­ளார்கள். காணி­யி­ருந்துங் காணி­யற்ற வாழ்வை அவற்றின் உரி­மை­யா­ளர்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள். 

7 இவ்­வா­றான இடம்­பெ­யர்ந்த மக்­களின் உரித்­துக்கள் பற்றி ஐக்­கிய நாடுகள் பத்து வரு­டங்­க­ளுக்கு மேலாக ஆராய்ந்து பின்­ஹெய்ரோ கேட்­பா­டுகள் என்ற தலை­யங்­கத்தின் கீழ் உள்­நாட்டு இடம் பெயர் மக்­க­ளி­னதும், அக­தி­க­ளி­னதும் வீடுகள் காணிகள் போன்­ற­வற்றைத் திரும்பப் பெறு­வது பற்­றிய சில கோட்­பா­டு­களை இயற்­றி­யுள்­ளார்கள். பொருட்­கோடல் உள்­ள­டங்­க­லாக 23 கொள்கைக் கருத்­துக்­களை ஐக்­கிய நாடுகள் சபை வௌியிட்­டுள்­ளது. 

அவற்றில் இருந்து ஒரே­யொரு கொள்கைக் கருத்தை மட்டும் இங்கு குறிப்­பிட விரும்­பு­கின்றேன். அதா­வது முக்­கி­ய­மான இரண்­டா­வது கொள்கைக் கருத்து பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது 

2. 2.1. எந்த ஒரு வீட்டில் இருந்தோ காணியில் இருந்தோ ஏதேனும் ஆத­னத்தில் இருந்தோ எதேச்­சா­தி­கா­ர­மா­கவோ அல்­லது சட்­டத்­திற்கு மாறா­கவோ எந்­த­வொரு அக­தியோ அல்­லது இடம்­பெயர் நபரோ வௌியேற்­றப்­பட்­டி­ருப்பின் அவர்கள் அவ்­வீட்­டிலோ காணி­யிலோ அல்­லது ஆத­னத்­திலோ மீளக் குடி­ய­மர்த்தப் படு­வ­தற்கு உரித்­து­டை­யவர் ஆவார். அத்­துடன் ஏதேனும் ஒரு சுதந்­தி­ர­மா­னதும் பக்­கச்­சார்­பற்­ற­து­மான விசா­ர­ணைச்­ச­பை­யொன்­றினால் வீடோ, காணியோ, ஆத­னமோ உண்­மையில் திரும்பப் பெற முடி­யாத ஒரு நிலை எழுந்­துள்­ள­தாகக் காணப்­ப­டு­மி­டத்து அதற்­கான நட்ட ஈட்டை அவர் பெற உரித்­து­டை­ய­வ­ராவார். 

2.2. மேலும் பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது. இடம்­பெ­யர்­வுக்குத் தக்க நிவா­ர­ண­மாக அர­சுகள் ஆதன மீள­ளிப்­பையே முன்­னு­ரி­மைப்­ப­டுத்த வேண்டும். இத­னையே மீள­ளிக்கும் நீதியின் மிக முக்­கி­ய­மான கருத்­தாக ஏற்­றுக்­கொள்ள வேண்டும். மீள­ளிப்புப் பெறும் உரித்­தா­னது துல்­லி­ய­மான ஒரு தனி­யு­ரித்து. வீடு காணி, ஆதனம் ஆகி­ய­வற்­றிற்கு உரி­மை­யு­டைய அக­தி­களோ, இடம்­பெயர் நபர்­களோ திரும்ப வந்தால் என்ன, வரா­தி­ருந்தால் என்ன மேற்­படி உரித்­தா­னது எந்த விதத்­திலும் பாதிப்­ப­டை­யாது என்றும் அதில் கூறப்­பட்­டுள்­ளது. இந்தக் கொள்கைக் கருத்­தா­னது மீள்க்­கு­டி­யி­ருப்பு என்ற தனி­யு­ரித்து எந்­த­ள­வுக்குச் சர்­வ­தேச மட்­டத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­பதை எடுத்துக் காட்­டு­கின்­றது. 

8 போர் முடிந்து ஏழா­வது வருடம் நடந்து கொண்­டி­ருக்கும் இத்­த­ரு­ணத்தில், மீள் குடி­யி­ருப்பு வேண்டிப் பதி­யப்­பட்ட இரண்­டா­யிரம் பேரின் வழக்­குகள் இன்னும் தாம­த­ம­டைந்­தி­ருக்கும் இந்­நி­லையில், எமது மக்­களின் வாழ்­வா­தா­ரங்கள் ஒடுக்­கப்­பட்டு, அடக்­கப்­பட்டு, நிராகரிக்கப்பட்டு அவர்கள் ஏதிலிகளாக எவரோ ஒருவர் காணியில், வீட்டில், ஆதனத்தில் கவனிப்பார் அற்று காத்துக் கிடக்கும் இவ்வேளையில், மேற்படி சர்வதேச கொள்கைக் கருத்தானது ஒரு ஔிக்கீற்றை எம்மண்ணில் உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது. 

இன்றைய கருத்தரங்கம் இந்த பின்ஹெய்ரோ கோட்பாட்டுக் கருத்தை வலியுறுத்துவதற்காக ஏற்பாடு செய்த ஒரு கூட்டமாகாவே எனக்குத் தென்படுகின்றது. மக்களின் பரிதவிப்பை நாங்கள் புரிந்துள்ளோம். ஆனால் அவர்களின் மீள்க்குடியேறும் உரித்தை உணர்ந்துள்ளோமா என்றால் பெருவாரியாக இல்லையென்றே கூற வேண்டும். இவ்வுரித்தின் தாற்பரியம் ஜனாதிபதி முதல் சகல மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராணுவத் தளபதிகளுக்கும் மிகத் திடமாகத் தெரியவர வேண்டும். தெரியப்படுத்த வேண்டும். 

மக்களை அகதிகளாக்கி, தம் நாட்டிலேயே அன்னியர்களாக்கி வருடக்கணக்காக அவர்களை ஏதிலி வாழ்வு வாழவிட சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற கருத்தை நாங்கள் இன்று முன்வைப்போம். எங்கள் அரசாங்கங்களும் இராணுவத்தினரும் மக்களின் ஒரு முக்கியமான தனியுரித்தைப் பறித்து வைத்துப் பங்கம் ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைகளைப் பாழ் படுத்தி வந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் கேட்டறியுமாறு இங்கிருந்து உரத்துக் கூறுவோம். 

9 நாங்கள் சட்டப்படி குற்றம் இழைத்து விட்டோம் என்று அரசாங்கத்தினரும் இராணுவத்தினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இன்றைய கூட்டம் அமைந்துள்ளது என்ற மனநிறைவுடன் ஆனால் எமது குடிபெயர்ந்த மக்களின் நிலையை நினைத்து மனவருத்தத்துடன் அவர்கள் வாழ்வில் வசந்தம் பரிணமிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு அமர்கின்றேன். 

நன்றி. 
வணக்கம். 
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் 
முதலமைச்சர் வடமாகாணம்