அரசியல் கைதிகள் விவகாரம் - கூட்டமைப்பு இன்று முக்கிய பேச்சு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் பங்கேற்கும் இந்த சந்திப்பு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் விடுதலை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக வழங்கியிருந்தது.
எனினும் சிலரே பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, மற்றைய தமிழ்க் கைதிகள் இன்னும் விடுதலையாகாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிவருகின்றது.அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று கூடி ஆராயவுள்ள கூட்டமைப்பு, அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் முக்கிய சில தீர்மானங்களை எடுத்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.