எரிபொருள் விலையை குறைக்கக் கோரி ஜே.வி.பி போராட்டம்
எரிபொருள் விலையை குறைக்கக்கோரி ஜே.வி.பி. போராட்டம் நடத்த உள்ளது. எதிர்வரும் வாரங்களில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என ஜே.வி.பி அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளதாகவும் அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலையை குறைப்பதற்காக அராசங்கத்திற்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடாத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.