முதற்தடவையாக “சேலைன்” உள்நாட்டில் உற்பத்தி
நாட்டுக்குத் தேவையான “சேலைன்” களை முதற்தடவையாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அடுத்த வருடம் முதல் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான உற்பத்திசாலையொன்று உடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் சேலைன்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்துவரும் ஓரிரு தவணைகளில் இலங்கைக்குத் தேவையான பெரும்பாலான மருந்துப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலதிகமாக “மெடிகல் பார்க்” ஒன்று அமைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்