தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் ஆரம்பம் (காணொளி)
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம்,
வட மாகாண முதல்வரும், பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றுதலோடு சற்றுமுன் ஆரம்பமானது,
யாழ் பொது நூலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அண்மையில் வடக்கு முதல்வருக்கும் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பிற்கு பின்னர் இன்றைய கூட்டத்தில் சி.வி பங்கேற்பது தொடர்பில் பல சந்தேகங்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
தொடர்புடைய செய்தி