Breaking News

இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார்? மாவையா? கலாவா?


மாவட்ட அமைச்சர் விவகாரத்தைப் பொறுத்தவரையில்
இழுபறி நிலை காணப்பட்டாலும், யாழுக்கு பச்சை அணியின் கலா நியமிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கான நியமனக்கடிமும் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்பட்டது. 

ஒரு கபினட் அமைச்சரின் அந்தஸ்த்துக்கு சமமான இந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்குக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவரும் கண்வைத்துச் செயற்பட்டது இரகசியமானதல்ல. யாழுக்கு ஒருவர், கிளிநொச்சிக்கு ஒருவர் என இரு மாவட்டங்களையும் பெறுவதற்கு அதிக வாக்குகளைப் பெற்ற இருவர் திட்டமிட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்துக்கு மாவையும், கிளிநொச்சிக்கு சிறி என கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக அரசுடன் பேரம் பேசவும் அவர்கள் தயாராக இருந்தனர். நல்லிணக்க அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியையும், அவை பிரதித் தலைவர் பதவியையும் கொடுத்த அரசாங்கம் இதனையும் தரும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

இந்த இழுபறிகளுக்கு மத்தியிலேயே கலாவுக்கு பதவி கொடுக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியது. இருந்தபோதிலும், மாவையண்ணை விடுவதாக இல்லை. பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் கடுமையாகப் போராடுவதாகத் தகவல். இதற்காக பல விட்டுக்கொடுப்புக்களை அவர் செய்ய வேண்டியிருக்கும். எனத்தமிழரசுக் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியவருகின்றது.