ஷிரந்தியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் சிராந்தியிடம் இவ்வாறு விசாரணைகளை நடத்த உள்ளனர்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மானிக்கப்பட்ட வீடு ஒன்றை மிகக் குறைந்த விலைக்கு தமது ஊடக ஆலோசகர் ஒருவருக்கு வழங்கியதாக சிராந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் வாரத்தில் சிராந்தியிடம் இந்த விடயம் குறித்து வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் மேல் மதிக்கத்தக்க வீடு நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டத்திற்கு முரணான வகையில் மிகக் குறைந்தளவு பணத்திற்கு தமது ஊடக ஆலோசகருக்கு இந்த வீட்டை வழங்கியதாகவும் சிராந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
மேலும், இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அப்போது பதவியில் இருந்த பல அரசாங்க அதிகாரிகளிடம் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.