எல்லை நிர்ணயம் மக்கள் நலன் கொண்டதாகவே அமைய வேண்டும் – ஜனாதிபதி
தேர்தல் தொகுதிகளின் எல்லை நிர்ணயமானது அந்த தொகுதிகளின் மக்களை சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர கட்சிகளின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைய கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (11) தளவதுகொடையில் இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எல்லை நிர்ணய செயன்முறை துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டால் அதன் உண்மையான குறிக்கோளை அடைய முடியாமல் போகும் என சுட்டிக்காட்டினார்.
எனவே அதனை அதிக காலம் எடுத்து ஒழுங்கான முறையில் செய்வதே பெருத்தம் என ஜனாதிபதி இங்கு மேலும் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய, அமைச்சர்கள் எதிர் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.