Breaking News

புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் உதவின – ஒப்புக்கொண்டார் ரணில்

விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கை கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்குத் தேவையான புலனாய்வு உதவிகளை வெளிநாடுகளிடம் இருந்து இலங்கை கடற்படைக்குப் பெற்றுக் கொடுத்திருந்தேன்.

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரும் அந்த புலனாய்வு உதவிகளை தொடர்ந்து பெற்று வந்தனர். போரின் போது, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் பெரியளவில் உதவிககளை வழங்கியுள்ளன.” என்றும் அவர் தெரிவித்தார்.