இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு பேரணி (படங்கள் இணைப்பு)
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ். நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவது எமது பொறுப்பாகும் என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே. பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியர்களுக்கு இலஞ்சம் வழங்கத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டது.
அதேவேளை, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியொன்றை கொழும்பில் நடாத்துவதற்கும் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த பேரணியானது எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து சுதந்திர சதுக்கம் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.