சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க மீண்டும் முயற்சி!
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிப்பதற்கு, கூட்டு எதிர்க்கட்சி மீளவும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் மெய்யான எதிர்க்கட்சியல்ல என்பதனை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்படுத்தியுள்ளதாக மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக மீளவும் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் அறிவித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட எதிர்க்கட்சியின் முக்கிய பொறுப்புக்களை தங்களுக்கு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.