Breaking News

கோப்பாயில் மீண்டும் குடும்பப் பதிவு - அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் குடும்ப பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர் விபர அட்டவணை பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76 ஆம் பிரிவு என்ற படிவத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமசேவையாளரின் மூலம் இவ்விண்ணப்பப் படிவம் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிராதன குடியிருப்பாளரின் பெயர், தேசிய அடையாள அட்டை இயக்கம், முகவரி, பொலிஸ் பிரிவு, குடும்ப அங்கத்தவர் விபரம், உறவு முறை, வீட்டு உதவியாளர், மற்றும் ஏனைய குடியிருப்போர். தங்குவதற்கான காரணம், காலம், கையொப்பம் என்பன குறித்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இவ்வாறான பதிவுகள் இடம்பெறுவது அச்சத்தை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.