வசீம் தாஜுடீனின் உயிரிழப்பு, கொலையென கண்டறியப்பட்டுள்ளது
கொழும்பு சிரேஷ்ட சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் தலைமையிலான மருத்துவர்கள் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தாஜுடீனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது தடவையாகவும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
மருத்துவர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் தாஜுடீன் வாகனத்தை செலுத்தவில்லை எனவும் அடித்து பலவீனப்படுத்திய பின்னர் அவரை வாகனத்தின் ஆசனத்தில் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
கொழும்பு தலைமை சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன், விசேட வைத்திய நிபுணர் ஜோன் பெரேரா மற்றும் மேலதிக சட்டவைத்திய அதிகாரி எஸ்.ஜீ.ஏ ஹேவகே ஆகியோர் தாஜுடீனின் உயிரிழப்பு தொடர்பான அறிக்கையில் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ்சிடம் சமர்ப்பித்திருந்தனர்.