Breaking News

நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் - சுண்ணாகத்தில் ஆர்ப்பாட்டம்

நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பில், இன்று காலை 10 மணிக்கு சுண்ணாகம் சந்திக்கருகில் கவனயீப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை, சமூக நீதிக்கான பொதுசன அமைப்பு ஏற்பாடு செய்து முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், மாகாண சபையே மத்திய அரசே பதில் கூறு என்று கோரிகை விடுத்தே மக்களும், குறித்த சமூக நீதிக்கான அமைப்பும் தமது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினார்கள்.

சுண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில்கள் நிலத்தடி நீரில் கலந்துள்ளமையால், சுண்ணாகம், தெல்லிப்பளை, உடுவில், சண்டிலிப்பாய் மற்றும் கோப்ப்பாய் ஆகிய பிரதேசங்களில் அவை குடிநீரில் கலந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, இப்பிரச்சினை தொடர்பாக நிபுணர் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்கள் குறித்த நிலைமைகளை ஆராய்ந்து, குடிநீரில், கழிவு எண்ணெயின் பாதிப்புக்கள் இல்லையென்று அறிக்கை சமர்ப்பித்திருந்தார்கள்.

ஆனாலும் நீர் குடிக்க முடியுமா? இல்லையா? என்பது குறித்து, அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.எனவே, குறித்த நீரை பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பில், அரசாங்கம் தமக்கு சரியான பதிலைத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தே, குறித்த கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.