இலங்கையில் விசாரணை நடத்தும் அதிகாரம் அனைத்ததிபதிகளுக்கு கிடையாது - டிலான் பெரேரா
அனைத்துலக நீதிபதிகளுக்கு இலங்கையில் வழக்கு விசாரணை நடத்துவதற்கான அதிகாரம் கிடையாது என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் பிரதி அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படும் கலப்பு நீதிமன்றத்தை இலங்கையில் அமைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த வகையிலேனும் வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கைக்குள் வந்தாலும், இலங்கை சட்டத்தின்படி அவர்கள் வழக்கு விசாரணைகளில் ஈடுபட முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அவர்கள் வழக்கு விசாரணைகளில் ஈடுபட பல்வேறு படிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், அப்போதே அவர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் விபரித்துள்ளார். எனினும் இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைகளில் ஈடுபடுவது என்பது நடக்கப்போவதில்லை எனவும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.