Breaking News

‪உயர்பாதுகாப்பு‬ வலய காணிகள் விடுவிக்க நடவடிக்கை ‪ - சிவப்பு‬ நிற கொடியுடன் அடையாளம்


யாழ்ப்பாணம் பலாலி இராணுவ தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 850 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசாங்கம் தீர்மாணித்துள்ளது.

இதன்படி இராணுவத்தினரால் காணிகளை பிரிக்கும் நடவடிக்கைகள் நேற்று தொடக்கம் இடம்பெற்று வருவதுடன் சிவப்பு நிறக் கொடிகள் ஏற்றி எல்லைகள் அடையாளமிடப்பட்டு வருகின்றது.

உயர்பாதுகாப்பு வலய பகுதியில் ஒரு பகுதியை கடந்த மார்ச் மாதம் விடுவித்ததுடன் அதன்பின்னரும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.