ராஜிதவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பு
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளை உள்ளடக்கவில்லை என தெரிவித்து, அகில இலங்கை அரச உதவியாளர் உத்தியோகத்தர் சங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தமக்கு வழங்க வேண்டிய சலுகைகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச சேவையில் உள்ளவர்களின் வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளை இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்திலே சுகாதார ஊழியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாக தெரிவித்து சுகாதார அமைச்சருக்க ஆதரவு தெரிவித்து ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின்னர் சுகாதார ஊழியர்களுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக கிடைப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலியான கோரிக்கைகளை முன்வைத்தே அகில இலங்கை அரச உதவியாளர் உத்தியோகத்தர் சங்கம் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் கடந்த காலங்களை விட தற்போது அதிக வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.