தரம் 5 புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிகள் வெளியாகின
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பாடசாலைகள் ரீதியான வெட்டுப் புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழ் மொழி மூல ஆண்கள் பாடசாலைகளுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
கொழும்பு றோயல் கல்லூரி – 178 புள்ளிகள், கண்டி சில்வெஸ்டர் கல்லூரி – 170 புள்ளிகள், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி –169 புள்ளிகள், கொழும்பு 07 டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம் 166 – புள்ளிகள், கண்டி அந்தோனியார் கல்லூரி –166 புள்ளிகள், கொழும்பு–05 இசிபத்தன கல்லூரி –164, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி –160, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி –156, மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி – 156, திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி– 154.
தமிழ் மொழி மூல மகளிர் பாடசாலைகளுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
கண்டி மகளிர் உயர்கல்லூரி – 174, கொழும்பு – 04 முஸ்லிம் மகளிர் கல்லூரி–173, கண்டி விகாரமா தேவி மகளிர் மகா வித்தியாலயம் – 170, கண்டி அந்தொனியார் மகளிர் கல்லூரி –169, பருத்தித்துறை மகளிர் பாடசாலை –164, கொழும்பு 04 இரமநாதன் இந்து மகளிர் கல்லூரி 160, கண்டி பதியுதின் மொஹமட் மகளிர் வித்தியாலயம் –160, அட்டன் கெப்ரியல் மகளிர் கல்லூரி –159, கல்முனை மொஹமட் மகளிர் கல்லூரி –159 திருகோணமலை வித்தியாலய வீதி ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி –157, மாத்தளை ஆமினா மத்திய வித்தியாலயம் –156, யாழ்பாணம்வேம்படி மகளிர் உயர் கல்லூரி –155,
தமிழ் மொழி மூல கலவன் பாடசாலைகளுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி –174, வவுனியா வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் –164, கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரி –164, கொட்டகலை கெம்பிரிஐ் கல்லூரி –160, கெக்குனாகொல தேசிய பாடசாலை –160, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் –158, மூதூர் மத்திய கல்லூரி –158, கொழும்பு 12 விவேகானந்தா கல்லூரி –157, கொக்குவில் இந்து வித்தியாலயம்–156