போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் : இந்தியா உறுதி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளான மக்களுக்காக இந்தியா 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்திய மக்களவையில் இன்று (புதன்கிழமை) எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்ர் கிரண் ரிஜிஜு இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகள் நடைபெறுமெனவும், இதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
அத்துடன், தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நாட்டில் தற்போது 101368 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.