Breaking News

முள்ளிவாய்க்கால் பகுதியில் வெள்ளத்தால் 50 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 20 குடும்பங்களின் வீடுகளினுள் முற்றுமுழுதாக வெள்ள நீர் புகுந்துள்ளது. இங்கு வெள்ள நீர் கடலினுள் செல்வதற்கு எந்தவிதமான வடிகால் அமைப்பும் காணப்படவில்லை.

30 வருட போர் முடிவடைந்த பிற்பாடு கடந்த 5 வருட காலப்பகுதியில் இங்கு எவ்வித புனரமைப்பு நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. இந்த சீரற்ற நிலைமையினை எந்த ஒரு அரச நிறுவனமும் இதுவரை காலம் கண்டு கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இங்கு ஒரு மாத காலமாக நீர் தேங்கி உள்ளதனால் மக்கள் பல தொற்று நோய் அபாயத்தினை எதிர் நோக்கி உள்ளனர். இதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்பதே முள்ளிவாய்க்கால் மக்களது அவாவாகும்.