இனவாத சக்திகளின் செயற்பாட்டிற்கு இடமில்லை – டிலான் பெரேரா
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தல்களின்போதும் இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமாகிய மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்துவிதமான செயற்பாடுகளும்முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர்தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்
தேசிய அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்டமா அல்லது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்டமா என பராளுமன்றத்தில் சிலர்கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறான கேள்விகள் மூலம் பிரிவினவாதமே அவர்களிடம் இருப்பதாக புலப்படுகிறது. இந்த அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமே இதன்கீழே பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோர் உள்வாங்கப்படுகின்றார்கள் என்பதனை அனைவரும் புறிந்துகொள்ள வேண்டும்.
எதிர்வரும் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பில் முன்னைய வாக்கெடுப்பிலும் பார்க்க அதி கூடிய பெருபான்மை வாக்குகளின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.