ஜனாதிபதியினை சிக்கலில் மாட்டியுள்ளனர் – நிஸ்ஸங்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெருக்கடிக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் நிறுவனத்தை கடற்படையினர் பொறுப்பேற்பதன் மூலம் ஓய்வு பெற்றுக் கொண்ட 6000 வரையிலான படையினரின் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஜனாதிபதிக்கு தெரிந்திருந்தால் இவ்வாறான தீர்மானம் எடுத்திருக்க மாட்டார்.
ஜனாதிபதிக்கு எதிராக குரல் எழுப்பி அவரை நிர்க்கதியான நிலைக்கு தள்ளி சிலர் அவன்ட் கார்ட் நிறுவனத்தை மூடியுள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் சந்தித்தது கிடையாது.அமைச்சர்கள் சிலரின் நற்பெயருக்கு நான் களங்கம் ஏற்படுத்தவில்லை, எனினும் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருந்தாலும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியங்கள் கிடையாது. தமது நிறுவனம் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் ஏன் கடந்த ஒக்ரோபர் மாதம் நிறுவனத்தின் ஒப்பந்த காலத்தை ஐந்து ஆண்டகளுக்கு நீடித்ததுஎன கேள்வி எழுப்பிள்ளார்.