வடக்கு முதல்வரை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முயற்சி - சுரேஷ் விசனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்டிருந்த கொள்கையிலிருந்து தற்போது விலகியிருக்கின்றதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
இதனால் எமது பிரச்சினைகள் மீது அதீத அக்கறை கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை தலைமையேற்குமாறு கோருகின்றனர். அவ்வாறிருக்கையில் தமது குறைபாடுகளை வெளிப்படுத்தாது முதல மைச்சரை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முயல்வது பொருத்தமற்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் மாவட்ட அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார். இதன்போது வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தலைவராகலாம். அது அவரது உரிமை. அதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும் என்பதுள்ளிட்ட பலவிடயங்களை குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் தொடர் பில் கருத்து வெளியிடுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பதவிக்காக போட்டி போடும் ஒருவராக சித்திரிக்கப்பட்டு வருகின்றார். அதுதொடர்பிலான கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை அனை த்துமே உண்மைக்கு புறம்பானவையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் தலைமையில் நடைபெறக்கூடிய விடயங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படு கின்றன. எவ்விதமான கொள்கைகளின் அடி ப்படையில் விடயங்கள் நடைபெறுகின்றன என்பதே தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையாக காணப்படுகின்றது.
விசேடமாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டுமென் பதில் எவ்வளவு தூரம் உறுதியாக உள்ளா ர்கள். காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்தரப்பினருடன் எவ்வாறு விட யங்கள் கையாளப்படுகின்றன. தற்போது வரையில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வரவு செலவுத்திட்டத்திற்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல கேள்விகள் காணப்படுகின்றன.
இதற்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை. இதன் காரணத்தாலேயே கூட்டமைப்பின் தலைமை மீதும் அவர் சார்ந்து செயற்படும் ஒருசிலர் மீதும் மக்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அத்தோடு தமது பிரச்சினைகள் குறித்து உறுதியான நிலைப்பாட்டுடன் பேசுபவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்கின்றார்கள்.
முன்னதாக வடக்கு முதல்வர் தலைமை யில் இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலையே என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அதற்கு எதிரான கருத்துக்களே கூட்டமைப்பின் தலைமையாலும் அவர் சார்ந்தவர்களாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளியிடப்பட்டன். அதேபோன்று சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்த போதும் அதற்கும் எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயங்களில் முதலில் வைத்திருந்த கொள் கைக்கும் தற்போது கொண்டிருக்கும் கொள் கைக்கும் பலத்த வேறுபாடு காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு நீதி வேண்டும் அவர்களது எதிர்காலம் பாதுகாப்பானதாக நிரந்தர அமை தியுடன் அமையவேண்டும் என்பதற்காக உறுதியாக இருப்பவர்களின் செயற்பாடு களை திசைமாற்றும் வகையில் தற்போது கூட்டமைப்பின் தலைமையால் கருத்துக் கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
கூட்டமைப் பிற்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டு மக்கள் விடயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை வெளிப்ப டுத்துவதற்கு பதிலாக அவற்றை மையப் படுத்தி செயற்படும் முதலமைச்சரை குற்ற வாளிக்கூண்டில் ஏற்ற முற்படுவது பொருத் தமற்றதாகும் என்றார்.