இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை
2002ம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்து தொடர்பான வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை அளித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தவறிவிட்டதாகவும், சல்மான்கானுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
2002ம் ஆண்டு மதுபோதையில் காரை செலுத்திய சல்மான்கான், நடைபாதையில் படுத்திருத்தவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்து சல்மான்கானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
இந்நிலையில் குறித்த தண்டனையை எதிர்த்து சல்மான் கான் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டார்.