எமது கைகளில் கறுப்புப் பணமோ, இரத்தமோ பட்டதில்லை – சரத் பொன்சேகா
எமது கைகளில் கறுப்புப் பணமோ அல்லது இரத்தமோ பட்டதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் மிகவும் நேர்மையான முறையில் நான் அரசியல் செய்கின்றேன்.எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன்.
அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர், நான் பணம் பெற்றுக்கொண்டதாக சுமத்திய குற்றச்சாட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலானது என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யும் நோக்கில் லஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.