Breaking News

சம்பிக்க எட்டாவது தடவையாக தாவ உள்ள கட்சி!

மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பிக்க ரணவக்க 1980களில் ஜே.வி.பி.யில் உறுப்புரிமை வகித்திருந்தார், அதன் பின்னர் 1994ம் ஆண்டில் ஜனதா மித்துரோ என்னும் கட்சியை ஆரம்பித்து அதில் உறுப்புரிமை வகித்து வந்தார்.

1999ம் ஆண்டில் சிஹல உறுமய கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டார். பின்னர் 2004ம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய கட்சியல் இணைந்து கொண்டார்.

2005ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட சம்பிக்க, 2015ம் ஆண்டில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் புதிய ஜனநாயக முன்னணியில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்.விரைவில் சம்பிக்க ரணவக்க எட்டாவது தடவையாகவும் கட்சி மாற உள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.