பட்டதாரிகளின் பிரச்சனைகளை தீர்க்க பிரதமர் நடவடிக்கை
தொழிலற்ற பட்டதாரிகள் சங்க அழைப்பாளர் டம்மிக முனசிங்க இதனை தெரிவித்துள்ளார்.இந்த குழு நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க மற்றும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்தை ஒன்று இடம் பெற்றது.இதன்போதே இந்த குழு நியமிக்கப்பட்டதாக தொழிலற்ற பட்டதாரிகள் சங்க அழைப்பாளர் டம்மிக முனசிங்க தெரிவித்தார்.