Breaking News

அரசியல் கைதிகள் உடன் விடுதலைச் செய்யப்படவேண்டும் : சபையில் சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் ஏன் மறுக்கிறது என்பதைப் புரிந்துககொள்ள முடியாமலுள்ளதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின், குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு மைத்திரி, ரணில் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டினைத் தெரிவித்த அதேவேளை, உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் வலியுறுத்தியுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.