Breaking News

தகவல்கள் இல்லாததால் அரசியல் கைதிகள் குறித்து தீர்மானிக்க அதிகாரம் நீதிமன்றிற்கு இல்லை! நீதவான்

அரசியல் கைதிகள் குறித்த முழுமையான விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும், இதனால் அரசியல் கைதிகள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

ஒரு தொகுதி அரசியல் கைதிகள் நேற்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதவான் இதனைத் தெரிவித்தார். இதனால் அரசியல் கைதிகள் சார்பில் முன்னிலையாகும், சட்டத்தரணிகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளை அணுகி தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் அறிவுரை வழங்கியுள்ளார்.

பெற்றுக்கொள்ளும் தகவல்களை நீதிமன்றில் வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகள் குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகள் நேற்று நீதிமன்றில் முன்னிலையான போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் எவரும் முன்னிலையாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.