ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தவறிழைத்தேன் - ஒப்புக்கொண்டார் மஹிந்த
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தவறுகள் இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது ஒப்புக்கொண்டுள்ளார். தாம் விட்ட தவறுகளை ஏனையவர்களும் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தன்னால் பல தவறுகள் இடம்பெற்றது. அதேபோன்ற தவறுகளை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஏனையவர்கள் செய்யக் கூடாது.
இன நல்லிணக்கம் என்பது புலம்பெயர் தமிழர் கோரும் அனைத்தையும் கொடுப்பது அல்ல. அதேபோல் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் மீள்ப்பரிசீலனை செய்யவேண்டும்’ என்றும் கூறினார்.