யாழில் சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள்
யாழில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நாளொன்றிற்கு மூன்று அல்லது நான்கு முறைப்பாடுகள் கிடைப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பலர் நேரில் சென்று முறையிட தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறான அச்சம் மற்றும் தயக்கம் காரணமாக குறித்த சம்பவங்கள் வெளிவராமல் போகின்றன. இதனால் மாவட்ட செயலகத்தின் விசேட இலக்கத்திற்கு இது குறித்து முறையிட கடந்த மாதம் ஏற்பாடு செய்திருந்தோம்.
இதன் பிரகாரம் நாள் ஒன்றிற்கு 3 அல்லது 4 முறைப்பாடுகள் என்ற விகிதத்தில் தற்போது வரையில் 40ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவற்றுடன் தொடர்புடைய திணைக்களங்கள் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.