Breaking News

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதாக தெரிவிக்கப்பட்டபோதும், கடந்த காலங்களில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்டது.

தற்போது அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவில் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.