மெக்சிக்கோவின் பல பகுதிகளிலும் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டில், சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தெற்கு மெக்சிகோவின் பல பகுதிகளிலும், இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி, சியாப்பாஸ் மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான டிரெஸ் பிக்கோஸ் அருகே பூமியின் அடியில் 117 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள கவுடேமலா நாட்டின் சில இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.