Breaking News

இலங்கையில் புதிய சித்திரவதை முகாம்கள் கிடையாது – அரசாங்கம்

இலங்கையில் புதிய சித்திரவதை முகாம்கள் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.இலங்கையில் எங்கும் சித்திரவதை முகாம்கள் இயங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் எங்கேனும் அவ்வாறு இரகசிய சித்திரவதை முகாம்கள் காணப்பட்டால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் எனவும் விசாரணைகளை நடாத்தத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான விசேட பிரதிநிதிகளின் அறிக்கை குறித்து அரசாங்கம் மிக உன்னிப்பாக கண்காணிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாமொன்று இயங்கி வந்தததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.இந்த முகாம் குறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்இலங்கையில் இவ்வாறான புதிய எந்தவொரு இரகசிய முகாம்களோ அல்லது சித்திரவதை முகாம்களோ கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கடந்த காலத் தவறுகளை புரிந்து கொண்டு அவற்றுக்குத் தீர்வு காண முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.இராணுவத்தினர் பயன்படுத்தி வரும் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.

வடக்கின் மிகவும்அத்தியாவசியமான நிலைகளில் தொடர்ந்தும் படையினர் நிலைநிறுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இரகசிய முகாம்கள் தொடர்ந்தும் காணப்படுவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.