வஸீம் தாஜூதீனின் மரணம் : இராஜதந்திரி ஒருவருக்கு சிவப்பு எச்சரிக்கை
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பான விசாரணையில் தற்போது முன்னாள் இராஜதந்திரி ஒருவரின் பெயரும் இணைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான சேபால ரட்நாயக்கவின் பெயரே குறித்த சம்பவத்தில் புதிதாக இணைந்துள்ளது. சேபால ரட்நாயக்க லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்தில் சேவையாற்றிய போது தாஜூதீனின் கொலை தொடர்பான சந்தேகநபர் ஒருவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டத்தரணியான சேபால ரட்நாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பர் ஆவர். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலக சிரேஷ்ட சட்ட அலுவலராகவும் 2013ல் குடிவரவு அலுவலராகவும் செயற்பட்டுள்ளார்.
இந்தநிலையில் முன்னாள் இராஜதந்திரியான சேபால ரட்நாயக்கவுக்கு எதிராக இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.