Breaking News

பண வவுச்சர் வழங்காத அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பாடசாலை சீருடைக்குப் பதிலாக பண வவுச்சர் வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை உரிய முறையில் செயற்படுத்தாத அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை 95 வீதமான பாடசாலை மாணவர்களின் கைகளில் பண வவுச்சர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சீருடை பண வவுச்சர்கள் அச்சிடும் நடவடிக்கைக்கு ஐந்து கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்கென தனியான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவசரமாக அச்சிடவேண்டி ஏற்பட்டதனால் இவ்வாறு பாரிய தொகையை செலவிட வேண்டி ஏற்பட்டது. அடுத்த வருடம் இந்த தொகையை கூடியளவு குறைத்துக் கொள்ள முடியும்.

கடந்த வருடத்தில் மாணவர்களுக்கு வழங்குவதற்கு கொள்வனவு செய்யப்பட்ட தரமற்ற பாடசாலை சீருடை பொதிகள் 12 லட்சம் கல்வி அமைச்சில் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் புடவைகளுக்கு மாற்றீடாக சிறந்த புடவைகள் உரிய நிறுவனங்களிடம் பெறப்பட்டு, அவை கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களிடையே பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.