GCE O/L பரீட்சையின் நாளைய தினத்திற்கான பரீட்சையை பிற்போடுமாறு கோரிக்கை
நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையின், நாளைய தினத்திற்குரிய பரீட்சையை வேறு ஒரு தினத்தில் நடத்துமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடுதழுவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல துறைகளின் பணிகள் முடங்கக்கூடும் எனவும், அதன் காரணமாக நாளைய தினத்திற்குரிய பரீட்சை பிறிதொரு நாளில் நடத்துமாறும் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.