Breaking News

சென்னையில் உணவு,குடிநீர் தட்டுப்பாடு


சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களுக்கு அத்திவாசிய தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த மாதம் 28-ம் திகதி முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகள் நீரில் மிதந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொபைல் போன் இயங்குவதற்கு தேவையான மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாலும், ஜெனரேட்டர் இயக்குவதற்கு தேவையான டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் செல்போன் டவர்கள் செயலிழந்துள்ளன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கா பொது மக்கள் தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மழை வௌ்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில் கால்டாக்சிகளும் இயங்கவில்லை இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஆட்டோக்கள் அடாவடி வசூலில் இறங்கியுள்ளனர்.

அவசர உதவி எண்: 1070; ஏர் டெல் உதவி எண் : 1948 அரசு வெளியீடு

.மழை நிலவரம் மற்றும் அவசர உதவி .தேவைப்படுவோர் கீழ்கண்ட போன் நம்பரை தொடர்பு கொள்ளுமாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இதன்படி 1070 என்ற எண்ணிலும் ஏர் டெல் உதவி எண் 1948 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்