வடக்கில் வீதிகள் திருத்தப்படாமையால் மக்கள் சிரமத்தில்
வடக்கு மாகாணத்தின் உள்ளக வீதிகள் திருத்தப்படாமை காரணமாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, இந்த வீதிகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பு செய்வதற்கு உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் 2ஆயிரத்து 120 கிலோ மீற்றர் நீளமான உள்ளக வீதிகள் இதுவரையில் புனரமைப்புச் செய்யப்படாதுள்ளன.
இவற்றில், 1800 கிலோ மீற்றர் உள்ளக வீதிகள் உடனடியாகப் புனரமைப்புச் செய்யவேண்டிய நிலையில் காணப்படுகின்றன. எனினும் வட மாகாண சபை இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதில்லை என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.