Breaking News

வட மாகாண உற்பத்தி பொருட்கள் கண்காட்சி இன்று ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாகாண உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி, யாழ்.இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியது.

‘செய்வோம் செய்விப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சியின் முதல் நாளான இன்று, பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

இக்கண்காட்சியில் வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து பலர் தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக உள்ளுர் உணவு பொருட்கள், கைவண்ணப் பொருட்கள் உற்பத்தி, கேக் வகைள், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி, மணப்பெண் அலங்கார பொருட்கள் போன்ற பல உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் மணப்பெண் அழங்காரப் போட்டிகளும் இந் நிகழ்வில் இடம்பெற்றிருந்தது. இக் கண்காட்சியானது, நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.