Breaking News

நாட்டின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை – ஜே.வி.பி குற்றச்சாட்டு

எதிர் கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதேசத்தை மாத்திரம் அடிப்படையாக் கொண்டு அதாவது, வட பகுதிக்கு ஏதேனும் நன்மை கிடைக்கின்றதா என்பதை மட்டுமே பார்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்னும், 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பானதாக காணப்படுகின்ற போதிலும் நாட்டின் மீது அக்கரையின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.