வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கில் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போதும், சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் வழக்கினை எதிர்வரும் 15 திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி எஸ்.லெனின் குமார், அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களை விளக்கமறியில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.