யாழ்ப்பாணத்தில் பரணகம ஆணைக்குழு
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு இந்த வாரம் முதல் யாழ்ப்பாணத்தில் விசாரணை நடத்தவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆறு தினங்களுக்கு இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன.இதன்படி யாழ்ப்பாணம், நல்லூர், வடமராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் இதன் விசாரணை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த ஆணைக்குழு மீதான நம்பிக்கை இல்லாத நிலையில் அதனை கலைக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.