Breaking News

அரசியல் கைதிகள் ஐவருக்கு புனர்வாழ்வு அளிக்க அனுமதி

அரசியல் கைதிகள் ஐந்து பேருக்கு புனர்வாழ்வு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா உயர் நீதிமன்றத்தின் ஊடாக நேற்று இவர்கள் ஐந்து பேருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதியளிக்கபட்டுள்ளனர்.

குறுகிய கால தண்டனை வழங்கப்பட்டு, இவர்களுக்கு புனர்வாழ் அளிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் அண்மைக்காலமாக சாகும் வரையிலான போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், இந்த அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கவும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 20 பேருக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

அந்தவகையில் முதற்கட்டமாக நேற்றைய தினம் 5 பேருக்கு புனர்வாழ்வளிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.