Breaking News

சுரேஷின் கூற்று ஏற்க முடியாதது - இராணுவம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடமொன்று காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ள கூற்றை இராணுவ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

52 ஆவது படைப்பிரிவின் கீழ் காணப்பட்ட இந்த இராணுவ முகாம் 2014 ஆம் ஆண்டு நீக்கப்பட்டுள்ளது.

முகாம் நீக்கப்பட்டதன் பின்னர் ஒரு வருடம் கழித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் இல்லாத ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் எனவும் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருகோணமலை கடற்படை தலைமையகத்திலும் சித்திரவதை முகாம் காணப்படுவதான முறைப்பாட்டையும் இவரே முன்வைத்திருந்தார் எனவும் இராணுவத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.