தமிழ் மக்கள் பேரவை : ஏனிந்த பயம் பதற்றம் பதகளிப்பு?
சுமந்திரன் எமது கொள்கையை ஏற்றுக்கொண்டால் அவரும் வந்து எம்மோடு இணைந்துகொள்ளலாம் என்றார் விக்கினேஸ்வரன்.
அனைவரும் வந்து எமது பேரவையை பலப்படுத்தியே தமிழர் தீர்வு காணவேண்டும் என்றார் மருத்துவர் லக்ஸ்மணன்.
உடனே கருணாவையும் டக்ளசையும் பேரவையில் இணைந்துகொள்ள அழைப்பு என ஒரு செய்தியாக்கினார் சரவணபவன்.
அதனை தலைப்பு ஆக்கியது தமிழ்வின். அதனை உரித்துபோட்டது ஜேவிபிநியுஸ்.
கருணாவை கூப்பிட்ட கதை உண்மைதான் அவரோடு கோல் பண்ணி உறுதிப்படுத்தினேன் எனச்சொன்னார் அரியநேத்திரன்.
தான் கோல் பண்ணி கதைப்பவரை கூப்பிட்டது தவறு என்று துள்ளிக்குதித்தார் அவர்.
உடனே துரோகிகளின் கூட்டான பேரவையுடன் இணையமாட்டேன் என செல்வம் அடைக்கலநாதன் சபதம் எடுத்தார் என இன்னொரு செய்தி.
“சீச்சீ அப்படிச் சொல்வேனா நான்” என்கிறார் அவர்.
“வரிசையாய் பதவிகளை எடுக்கிறிங்களே எங்கள் மக்களுக்கு என்ன விடிவு” என விக்கினேஸ்வரன் கேட்பது போல ஒரு காட்டுன் வந்தது.
உடனே அந்த படத்தை மாற்றியமைத்து சம்பந்தர் அதனை கேட்பது போல மாற்றியமைத்து வெளியிட்டது கூட்டமைப்பு ஊடகம்.
மட்டக்களப்பு சிவில் சமூகம் பேரவையுடன் பிணக்கு என இன்னொரு செய்தி.
உரியமுறையில் அழைக்கவில்லை அதனாலேயே சங்கடம். அதற்காக பேரவையுடன் எதிர்ப்பு என வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறது அந்த அமையத்தின் செய்தி.
பிரச்சனை தீரும்போது சிக்கல்களை உருவாக்கவேண்டாம் என்றார் சிறிதரன். இப்போது பிரச்சனை இருப்பதால்தான் பேரவை உருவாகியது என்கிறார் அவர்.
சரி நாங்கள் பதவிக்கு கொண்டுவந்த நல்லாட்சி அரசு என்ன சொல்கிறது?
கூட்டமைப்பை குழப்பியடிக்கும் இனவாதிகளின் கூட்டே தமிழ்மக்கள் பேரவை என்கிறார் ராஜித சேனாரத்ன.
புதிய ஆண்டில் கால்பதிக்கும் நேரத்தில் ஏனிந்த பயம் பதற்றம் பதகளிப்பு?