Breaking News

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமருக்குமிடையே நேற்று முன்தினம் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது மார்ச் மாதம் முடிவடைவதற்கு முன்னர், தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், புதிய முறையில் தொகுதி வாரியாகவே நடக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தேர்தலுக்காக பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.