காணாமல் போனோர் ஆணைக்குழுவின் அமர்வுகள் 2 ஆம் நாள் யாழப்பாணத்தில்
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பா டுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று இரண்டாவது நாளாக யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய யாழ். பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை காலை முதல் யாழ். மாவட்ட கேட்டபோர் கூட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று முதல் மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 165 பேர் சாட்சியமளித்துள்ளனர்.இந்நிலையிலேயே 44 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஈ.பி.டி.பி, இராணுவம், கடற்படை, குற்றப் புலனாய்வு பிரிவு, வெள்ளை வேன் ஆகியவற்றினால் தமது பிள்ளைகள் மற்றும் உறவுகள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாக நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது பலர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.